மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வங்கமொழித் துறையில் பேராசிரியராக பணிபுரிபவர் அப்துல் காஃபி. இவர் இன்று பல்கலைக்கழகத்தின் முன்பக்க வாசலில் இருந்த டீக்கடையில் தேநீர் அருந்தியுள்ளார்.
அப்போது அந்த பக்கம் வந்த நபர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பேராசிரியரை அக்கம் பக்கத்தில் நின்றிருந்த மாணவர்கள் மீட்டனர்.
இந்த தாக்குதலில் கடந்த 2015ஆம் ஆண்டில் முன்னாள் மாணவர் ராஜேஷ் சான்ட்ரா என்பவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்துல் காஃபியிடம் தான் படித்தபோது தன்னை வேற்றுமையுடன் நடத்தியதாகவும் அதனால் தாக்கியதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார்.