ஜம்மு காஷ்மீர் மாநிலம் கண்டேர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் ராயிஸ் லோன் என்பவர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. ராயிஸ், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.
தற்போது இதுபற்றி விசாரணை நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீர் மன்கோட்டே பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது வீரர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தானைச் சேர்ந்த 2 வீரர்களை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை!