ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில் இவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பிணவறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இவரது சடலத்தை உரிய முறையில் தகனம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், மூதாட்டியுடன் தொடர்பிலிருந்தவர்களை சோதனை செய்யும் வேலையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்த மரபணு சோதனையில் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள்