ETV Bharat / bharat

காஷ்மீரில் நடக்கவிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரத்து! அதன் பின்னணி என்ன? - jammu kashmir issue update

ஸ்ரீநகர்: அனைத்து கட்சிகள் ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பை, பாதுகாப்பை கருதி அம்மாநில காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

syed ali geelani
author img

By

Published : Sep 18, 2019, 9:37 PM IST

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து தொலைத்தொடர்பு துண்டிப்பு, ஆங்காங்கே போராட்டங்கள் என அம்மாநிலத்தில் பெருவாரியான இடங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாதங்காலமாக ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் சூழ்நிலை குறித்து தெரிவிக்கும் வகையில், அம்மாநிலத்தின் அனைத்து கட்சிகள் ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பு (All Parties Hurriyat Conference) சார்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுவதாகப் தெரிவிக்கப்டடிருந்தது.

அதற்காக ஸ்ரீநகரை அடுத்த ஹதர்போர (Hyderpora) பகுதியில் உள்ள அனைத்து கட்சிகள் ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி வீட்டு அருகே புகைப்படப் பத்திரிகையாளர் உட்பட 35 ஊடகவியாளர்கள் காலை 10.30 மணியளவில் வந்திருந்தனர்.

ஸ்ரீநகரில் திரும்பி சென்ற பத்திரிகையாளர்கள்

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதியும் மேலும் அப்பகுதியில் 144 தடை சட்டம் அமலில் இருப்பதை காரணம் காட்டியும் அம்மாநில காவல்துறையினர் அந்த செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்து, அங்கு வந்திருந்த அனைத்து பத்திரிகையாளர்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

இயல்பு நிலைக்குத் திரும்பும் காஷ்மீர்?

Intro:Body:

J&K Police stops Kashmir journalists from attending syed ali geelani  press conference

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.