இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் நடுவே, கரடு முரடான மலைப் பகுதிகளில் பணியாற்றிவரும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறை பனியையும் பொருட்படுத்தாது இன்று அதிகாலை யோகா பயிற்சியில் ஈடுபட்டது, பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
லடாக்கில் உள்ள கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பாதுகாப்புப் படையினர் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் செய்தனர்.
இதையும் படிங்க : கூகுள் பே ஒரு மூன்றாம் தரப்பு செயலி மட்டும்தான்: ரிசர்வ் வங்கி