ETV Bharat / bharat

விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளும் வருமான வரித்துறையினர்

நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை அலுவலர்கள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vijay
vijay
author img

By

Published : Feb 5, 2020, 4:37 PM IST

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா தயாரிப்பு, விநியோகம், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் ஆகிய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில், அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இந்த சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்ததையடுத்து, தற்போது நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை அலுவலர்கள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:சென்னையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பு, வினியோகம், மற்றும் திரைப் படங்களுக்கு பைனான்ஸ் ஆகிய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் பல்வேறு இடங்களில் இறங்கி திரையரங்குகளிலும் நடத்தி வருகின்றனர்.இன்று காலை 10 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள திருமலை பிள்ளை தெருவில் இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மொத்தமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இந்த சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.பைனான்சியர் அன்புச்செழியன் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிக்குமார் இன் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருமான வரி சோதனை, இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 6 மணி நேரம் வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.