ETV Bharat / bharat

கரோனா, காலத்தின் சோதனைக் கட்டம்! - It is a Testing Time

அறிகுறிகள் காணப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டால் மட்டுமே கரோனா தொற்று பரவலின் உண்மையான நிலையை அறிய முடியும் என்கிற வல்லுநர்களின் கருத்தை யாரும் மறுத்து ஒதுக்கிவிட முடியாது.

it-is-a-testing-time
it-is-a-testing-time
author img

By

Published : Apr 11, 2020, 10:13 AM IST

கரோனாவை ஒரு உலகளாவிய கொள்ளை நோயாக அறிவிப்பது குறித்து உலக நலவாழ்வு அமைப்பானது, விவாதித்துக்கொண்டு இருந்த நேரத்தில்.... கரோனா கிருமியானது நேரத்தின் ஒரு பொழுதைக்கூட வீணாக்கிக்கொண்டு இருக்கவில்லை; ஏற்கெனவே அது உலக நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. உலக அளவில் 13 லட்சம் பேருக்கு நோய்த் தொற்றையும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி ஒரு பயங்கரமான சூழலை கரோனா உருவாக்கி இருக்கிறது; இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கும் ஒரு பெரிய சவாலாகவும் மாறி நிற்கிறது. மூன்று வார நாடு முடக்க காலத்தின் கடைசி வாரம் இது என்பதால், நாட்டில் கரோனா எந்த அளவு இதனால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பது, இந்த மாதம் 16ஆம் தேதிக்குள் தெளிவாகிவிடும். இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டு, முதல் ஐநூறு பேருக்கு நோய்த் தாக்கம் பரவ 55 நாள்கள் ஆகியிருந்தது. ஆனால், தற்போதைய 3 ஆயிரத்து 500 கரோனா பாதிப்புகளில் ஒரே நாளில் ஐநூறு பேருக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பும் அடங்கும் என்பது, நிலைமை எந்த அளவுக்கு ஆபத்தாக மாறிக்கொண்டு இருக்கிறது என்பதை விளக்குகிறது. அறிகுறிகள் காணப்படும் அனைத்து நோயாளிகளும் பரிசோதனை செய்யப்பட்டால் மட்டுமே கரோனா தொற்று பரவலின் உண்மையான நிலையை அறிய முடியும் என்கிற வல்லுநர்களின் கருத்தை யாரும் மறுத்து ஒதுக்கிவிட முடியாது.

இருப்பில் உள்ள சோதனைக் கருவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வெளி நாடுகளில் இருந்து திரும்பி வருவோரில் யாருக்கெல்லாம் கரோனோ தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றனவோ, அவர்களுக்கு பரிசோதனை செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. கரோனா நோய்த் தொற்றின் பரவலானது நான்கு கட்டங்களாக இருக்கும் என்கிற நிலையில், வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களும் அவர்களின் நெருங்கிய நண்பர்களும் தனிமையில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய நோய் கண்டறிதல் சோதனைகளும் செய்யப்பட்டன. கரோனா கிருமித் தாக்குதல் கண்ணியைத் துண்டிப்பதற்கு மூன்று வாரங்கள் போதுமானதாக இருக்கும் எனும் நம்பிக்கையுடன், மார்ச் 24 அன்று நாடு ஊரடங்கு உத்தரவை மைய அரசு வெளியிட்டது. இதற்கிடையே, தேவையான மருத்துவக் கட்டமைப்புகளுடன் வைரஸ் தொற்றை எதிர்த்து சமாளிப்பதற்கு, போதுமான சுகாதாரப் பணியாளர்களை தயார்நிலைக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் 22 தொற்றுப் பதிவுகளும் மகாராஷ்டிர மாநிலத்தில் கண்டு அறியப்பட்ட 11 சதவீத தொற்றுப் பதிவுகளும் வெளி நாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்களுடனோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுடனோ தொடர்பு உடையவர்களாக இல்லை என்பதால், கரோனா ஒரு தொற்று நோயாகப் பரவுகிறதா என்பதில் கடுமையான சந்தேகங்கள் உள்ளன. எனவே, கரோனாவுக்கான அறிகுறிகள் உள்ள அனைவரும் தீவிரமான பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்; நோய்த் தாக்கம் உள்ளது எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இருமல், காய்ச்சல், பருவ கால ஒவ்வாமைக் கோளாறுகள் போன்றவை உலக அளவில் எப்போதும் பொதுவானவை. கரோனாவுக்கும் ஆரம்பத்தில் இதே அறிகுறிகள் இருப்பதாக அதிகமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஊட்டச் சத்து குறைவாக உள்ளவர்கள், முதியோர் மற்றும் நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் கரோனா தொற்றானது கடுமையான தாக்கத்தை உண்டாக்குகிறது. இளைஞர்களும்கூட கரோனா தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 1918ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்பெயின் காய்ச்சல் எனப்பட்ட கொள்ளை நோயைப் போல கரோனா உருவெடுக்கிறது என அது சுட்டிக்காட்டியுள்ளது. மார்ச் மாதத்திலேயே உலக நலவாழ்வு அமைப்பானது, 'கரோனா தொற்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைவரையும் பரிசோதனை செய்யுங்கள்; எல்லா நாடுகளுக்கும் நாங்கள் சொல்லவிரும்பும் செய்தி, இது ஒன்றே!’ என்று எச்சரிக்கை விடுத்தது. இவ்வமைப்பின் எச்சரிக்கை வெளியான தருணத்தில், சீன அரசானது கடந்த மாதக் கடைசிக்குள் மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்து முடித்திருந்தது. காரணம், 2003 ஆம் ஆண்டில் சார்ஸ் காய்ச்சல் தொற்றுநோயால் பட்ட அனுபவத்திலிருந்து அந்த நாடு படிப்பினையைக் கற்றுக்கொண்டது எனலாம். சார்சைக் கண்டறிந்த ஹாங்காங் குழுவின் உதவியுடன், போர்க்கால அவசரத்தில், நோய்க் கண்டறிதல் சோதனைக் கருவிகளை உருவாக்கியது. அத்துடன் பயன்படுத்துவதற்கு கிடைக்கும்படியும் செய்தது.

ஜெர்மனியின் பெர்லின் விஞ்ஞானியான ஆல்பர்ட் லான், ஏற்கெனவே சார்சைப் போன்ற கரோனாவின் பேரழிவு சக்தியை உணர்ந்து இருந்தார். அதன் மூலம், ஜெர்மனி அரசானது சாதுர்யமான செயல்பாட்டால் கடந்த பிப்ரவரி மாதக் கடைசிக்குள் 40 மில்லியன் நோய்க் கண்டறிதல் கருவிகளைப் புதிதாகவே உருவாக்கியது. வாரத்துக்கு 15 இலட்சம் கருவிகளைத் தயாரிக்கும் திறன் உடைய அந்நாடு, அன்றாடம் 30 ஆயிரம் பரிசோதனைகளை நடத்தி திறம்பட கரோனாவை எதிர்த்து நிற்கிறது. கரோனா வைரசை முதல் கட்டத்திலேயே கண்டறிவதன் மூலமும் தேவையான சிகிச்சையை அளிப்பதன் மூலமும் ஜெர்மனியானது முழுமையான நம்பிக்கையுடன் கரோனா தடுப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது. பிரான்சு நாட்டில், 82 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 நோய்த் தாக்கம் பதிவாகியுள்ளது. கரோனா தொற்றி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500க்கும் மேல் போய்விட்டது. ஜெர்மனியிலோ 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 275 என்கிற அளவில் கட்டுப்படுத்தியதில், கரோனா தடுப்பில் அந்நாடு வெற்றி அடைந்ததன் இரகசியம் அடங்கியுள்ளது. தென் கொரியாவும் இதே மூல உத்தியைத்தான் கடைபிடித்தது. முதலில் அறிகுறிகள் காணப்படும் சந்தேக நபர்கள் அனைவரையும் விரைவாக பரிசோதிப்பதும், தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதுமான இரண்டு அம்ச உத்தி இந்தியாவுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கரோனா இருளை எதிர்த்துப் போராடுவதற்காக ஏப்ரல் 5 ஆம் தேதியன்று நாடு முழுவதும் தீப ஒளி ஏற்றுமாறு பிரதமர் அழைப்பு விடுத்த நேரத்தில், இந்தியாவில் மொத்தம் 89 ஆயிரத்து 534 நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல். கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை முன்னதாக, 'பருவகால சளி/காய்ச்சல்தான், வேறு ஒன்றும் இல்லை' என அமெரிக்கா சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு, எச்சரிக்கைகளை ஒதுக்கித் தள்ளியது. அதே நாட்டின் அரசு, இப்போது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி, மனித உயிர் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிக்கொண்டு இருக்கிறது. நமக்கு, உறுதியான ஒரு மூல உத்தியை உருவாக்குவதை ஒதுக்கித்தள்ளக் கூடாது என்பதற்கான முன்னறிவிப்பாக இது இருக்கக்கூடும். இந்தியாவில் ஏற்கெனவே கோவிட்-19 நோய்த் தாக்கம் உடைய மையமான பகுதிகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. அத்துடன், அந்தப் பகுதிகளை முற்றாக மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்து, அதிகமான கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுக்க முனைகிறது.

மூன்று நாள்களுக்கு ஒரு முறை மைய அரசானது கரோனா பரிசோதனைகளின் அளவு இரட்டிப்பாக ஆக்கும் என்றும் கரோனா இருக்கலாம் என்கிற சந்தேகத்துக்கு ஆளாகும் நபர்களுக்கு காசநோய் பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்த உள்ளதாவும் பதினைந்து நிமிடங்களுக்குள் முடிவை அறியக்கூடிய ஆன்டிபாடி பரிசோதனைகள் தீவிரமாக செய்யப்படும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. கரோனா பரிசோதனைக்கு ரூ. 4 ஆயிரத்து 500 கட்டணம் என மைய அரசு நிர்ணயித்துள்ளது. பல தனியார் நிறுவனங்களும் இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. அடுத்து வரக்கூடிய நாள்களுக்கான தேவைக்கு இதுவே போதுமானதாக இருக்காது. ஆகையால், புகழ்பெற்ற தனியார் பரிசோதனை ஆய்வகங்களை இதற்கு ஊக்குவிப்பதன் மூலம், வட்டார அளவில் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா பாதிப்பின் வரைபடத்தில் இப்போது மேல்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கோடானது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்குள் கீழ்மட்டமாக மாறும் என்கிற நம்பிக்கையானது, சரியானது. ஆனால். இதற்கிடையில் இதுவரை ஏற்பட்டிராத சவாலை எதிர்கொள்ள நேர்ந்தால், பரிசோதனைகளைச் செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் அரசு நிர்வாக அமைப்புகளைத் தயார்செய்வது, இன்றியமையாதது ஆகும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.