ETV Bharat / bharat

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ஐ.டி. ரெய்டு - கர்நாடக காங்கிரஸ்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

IT Raid
author img

By

Published : Oct 10, 2019, 1:24 PM IST

ஐ.டி. ரெய்டு

கா்நாடக காங்கிரஸ் தலைவராகவும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் பரமேஸ்வர். காங்கிரஸ் மூத்தத் தலைவரான பரமேஸ்வர் வீட்டில் இன்று வருமானவரித் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். பரமேஸ்வர் வீடு அமைந்துள்ள சதாசிவ நகர், அவருக்குச் சொந்தமான சித்தார்த்தா கல்லூரி, பள்ளிகளிலும் இந்தச் சோதனை தொடர்ந்து நடந்துவருகிறது.

சித்தராமையா கேள்வி

மேலும் தொட்டபெல்லாபூர் பகுதியில் உள்ள பரமேஸ்வருக்கு சொந்தமான இடங்களிலும் இந்தச் சோதனை நடந்தது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பரமேஸ்வர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனை குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்

இது குறித்து அவர் ட்விட்டரில், பரமேஸ்வர் வீட்டில் தொடர்ச்சியாக வருமானவரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. இதில் உள்நோக்கம் உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகின்றனர். கொள்கை, ஊழல் பிரச்னைகளில் அவர்கள் எங்களை எதிர்கொள்ள தவறிவிட்டனர். இத்தகைய தந்திர அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
பரமேஸ்வர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

Intro:Body:

IT attack on former DCM Parameshwar resident

Sidhartha engineering college, school and his sadashivanagar resident are attacked by IT officers 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.