ETV Bharat / bharat

சந்திராயன் 2 மே மாதம் விண்ணில் செலுத்தப்படும் -இஸ்ரோ தலைவர் சிவன்

அமராவதி: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து, எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள், பிஎஸ்எஸ்வி சி-45 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி 45
author img

By

Published : Apr 1, 2019, 6:24 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது. இந்நிலையில், இன்று காலை சரியாக 9.27 மணிக்கு பிஎஸ்எல்வி சி-45 என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) எமிசாட் (EMISAT) என்னும் 436 கிலோ எடை கொண்ட மின்னணு நுண்ணுறிவு செயற்கைக்கோள், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.

முதல் முறையாக மூன்று செயற்கைக்கோள்கள் வெவ்வெறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய புதிய சாதணை படைக்கவுள்ளது. இது தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், " இத்திட்டத்திற்கான 95 விழுக்காடு பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டது. தொலைத்தொடர்பு, மின்காந்த அலைகற்றை கண்காணிப்பு என பல்வேறு துறைகளில் செயற்கைகோள்கள் பயன்படுத்த உள்ளது. இஸ்ரோவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்வையாளர் கூடத்திலிருந்து 1200 பேர் இதனை கண்டுகளித்துள்ளனர். அடுத்த முறை 5000 பேரும், அதற்கு அடுத்த முறை 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். மே மாதம், பி.எஸ்.எல்.வி 46,பி.எஸ்.எல்.வி 47 மற்றும் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட உள்ளது " என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.