ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், லஷ்கர், அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளின் உதவியோடு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சமூக வலைதளங்களில் அதன் கருத்தியல்களை இந்தியாவில் பரப்பி வருகிறது.
அதன்படி தென் மாநிலங்களான தெலங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இம்மாநிலங்களில் 17 வழக்குகள் பதியப்பட்டு, 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாநிலங்கள் மட்டும் இல்லாமல் மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் இந்த அமைப்புகளின் செயல்படுகளை தூண்டிவிடுவதில் பாகிஸ்தானின் பங்கும் அதிகம் காணப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற 13 வங்கதேசத்தினர் கைது!