திஸ்பூர்: அஸ்ஸாம் மக்கள் மட்டுமின்றி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் மத்திய அஸ்ஸாமிலுள்ள ஹோஜை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. சில இஸ்லாமிய மதகுருக்கள் இரு பெண்களை துன்புறுத்தும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகளவு மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் இஸ்லாமிய மதகுருவும், அவருடைய நண்பர்கள் சிலரும் பொது வெளியில் இரன்டு பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் இரு பெண்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
மேலும், அந்த மதகுரு இந்தச் சம்பவத்தின்போது, தன்னை ரவுடி எனவும் கூறிக்கொள்கிறார். சில நிமிடங்களில் மதகுருவிற்கு துணையாக சிலரும் அந்தப் பெண்களை தாக்கினர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்களில் ஒருவர் தனக்கு யாருடனும் தொடர்பு இல்லை என பலமுறை கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த மக்களில் சிலர், இரு பெண்களில் ஒருவர் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இந்தப் பகுதிக்கு அவர்கள் உள்நோக்கத்துடன் வந்திருப்பதாகவும், அது தொடர்பாகவே மதகுரு அவர்களிடம் விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தனர்.
அஸ்ஸாமில் நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அசாம் சுதேசிய மாணவர்கள் சங்கம், "சட்டத்தை கையில் எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. இந்தப் பெண்கள் உள்நோக்கத்துடன் இப்பகுதிக்கு வந்திருப்பதாக சந்தேகித்தால், அவர்கள் நேரடியாக காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ தான் தகவல் அளித்திருக்க வேண்டும். எப்படி ஒரு தனிப்பட்ட நபர் பொதுவெளியில் இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மதகுரு, அவருக்கு உதவியவர்கள் என அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க: பெண்குழந்தைகள் மீதான அத்துமீறல்களைக் குறைக்க பல துறைகளுடன் கைக்கோர்த்து நடவடிக்கை