மும்பை: சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சில பத்திரிகைகள், ஊடகங்கள், ட்விட்டர் டிரெண்டுகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு #ArrestRhea என்ற ஹேஸ்டேக் பரப்புரையை சுட்டிக் காட்டியது.
அப்போது, “சேனலின் இறந்தவரின் புகைப்படங்களை ஏன் ஒளிபரப்பினார்கள் என்று கேள்வியெழுப்பினார்கள்.
மேலும், “நடிகரின் மரணம் தற்கொலையா அல்லது படுகொலையா என்பது போன்றும் செய்திகள் வெளியாகின. இதுதான் புலனாய்வு இதழியலா? என்றும் கேள்வியெழுப்பினார்கள்.
முன்னதாக சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான செய்திகளை நிறுத்துமாறு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கிறேன்' - நடிகை கங்கனா காட்டம்!