சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்தவர் பிரமிளா பாய். கணவனை இழந்துவாடும் இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. பார்வையற்றவர்களாக பிறந்த இவர்கள் அரசிடம் உதவி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்கள். குடும்பத்துடன் பாழடைந்த வீட்டில் இவர்கள் வாழ்கிறார்கள். இதுகுறித்து பிரமிளா பாய் கூறுகையில், "இந்த தள்ளாடும் வயதில் என்னால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆனால், என் இரு குழந்தைகளை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். என் கணவரும், மூத்த மகனும் சாலை விபத்தில் இறந்துவிட்டார்கள்" என்றார்.
![வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4234540_pradhan.jpg)
இதுகுறித்து பிரமிளா பாயின் மகளான ரீனா கூறுகையில், "நாங்கள் இருக்கும் வீட்டை மறுசீறமைப்பு செய்ய வேண்டும். ஏற்கனவே, சில பகுதிகள் இடிந்துவிட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கீழ் மக்களுக்கு வீடுகள் கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை" என்றார்.
இதையடுத்து, பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் உரிய மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா?, இடையில் இருப்பவர்களின் தலையீட்டால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்களா?, வெளியில் தெரிந்தது இந்த ஒரு குடும்பம்; தெரியால் தவிப்பது எத்தனையோ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த குடும்பத்தின் நிலையுடன் ஒப்பிட்டு சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.