ETV Bharat / bharat

உண்மையை உரக்கச் சொல்வது குற்றமா? - கரோனா லாக்டவுன்

ஊடகங்களின் கருத்துரிமையைப் பறிக்கும்விதமாக, அரசு செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நிகழ்வுகள் தொடரும் நிலையில் இது தொடர்பான சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு இதோ...

author img

By

Published : Jun 22, 2020, 5:07 PM IST

'சத்யமேவ ஜெயதே' - இந்தியப் பண்பாடு நமக்கு கற்றுத்தந்து பின்பற்றச் சொல்வது இதைத்தான். 'உண்மையே எப்போதும் வெல்லும்' என்பதுதான் இதன் பொருள். இதை முழுமையாக உள்வாங்கி இதற்கு அதி முக்கியத்தும் அளிக்கும்விதமாகவே இந்திய அரசியலமைப்பை உருவாக்கும்போது ஜனநாயகத்தில் ‘பேச்சுரிமை’ மிக முக்கிய அம்சமாகச் சேர்க்கப்பட்டது.

இதை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்தின் ’நான்காம் தூண்’ என்று போற்றப்படும் பத்திரிகைத் துறை செயல்படுகிறது. ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் பத்திரிகைத் துறையின் குறிக்கோள், உண்மையைத் துல்லியமாக மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் நம்மை ஆளும் தலைவர்களுக்குச் சாதகமில்லாத, அவர்கள் விரும்பாத உண்மைகளைத் தோண்டியெடுத்து மக்கள் முன் கொண்டுசேர்க்கும் பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை, காலில் போட்டு மிதிக்கும் செயல்கள் தற்போது அரங்கேறிவருகின்றன. இது நம் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே காலில் போட்டு மிதிப்பதற்கு ஒப்பாகும்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுடன் தோளோடு தோள் நின்று, பத்திரிகையாளர்களும் அரும்பணியாற்றுகின்றனர். மக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் உள்ள குறைபாடுகள், பற்றாக்குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உதவும் தூண்டுகோலாகப் பத்திரிகையாளர்கள் செயல்படுகின்றனர். ஆனால் இந்தச் சேவைகளைச் செய்யும் பத்திரிகையாளர்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டு அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நசுக்கும் செயல் அரங்கேறிவருகிறது.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மனத்தின் குரல் ‘மன்கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார். மார்ச் மாத கடைசி வாரத்தில் நிகழ்த்திய உரையின்போது, கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர் உள்பட அனைத்து போராளிகளுக்கும் நாம் மதிப்பளித்து அவர்களைப் போற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

சுகாதாரத் துறை பணியாளர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை சகிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. அத்துடன் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் அவசரச் சட்டத்தையும் கொண்டுவந்தது. ஆனால், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (பிபிஇ) பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதனால் நோயாளிகளிடமிருந்து வேகமாகத் தங்களுக்கும் நோய்த்தொற்று பாதிக்கும் இடர் இருப்பதாகவும் முறையிட்டனர். இது குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும், இந்தச் சூழ்நிலையில் முன்னேற்றம் இல்லை.

குறிப்பாக நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அரசு மருத்துவமனையில் இருக்கும் குறைபாடுகளை வெளியிட்ட ஒரு மருத்துவர் மீது அரசு சார்பில் வழக்கு பதியப்பட்டு, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், புகார் அளிப்பவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுப்பதை கைவிட்டு, மாநில சுகாதாரத் துறையை மேம்படுத்துங்கள் என்று டெல்லி அரசுக்கு குட்டுவைத்து அறிவுரை வழங்கியது. டெல்லியில் மட்டுமல்ல, பல மாநிலங்களில் உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பத்திரிகையாளர்களின் குரல்வளையை நசுக்குவது போல, அவர்கள் மீது அரசுகள் எதிர்த் தாக்குதல் நடத்துகின்றன.

கரோனா தனது கோர முகத்தைக் காட்டி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் நேரத்தில், உலகின் பல்வேறு நாடுகளும் அரசுகளும் குழம்பியிருந்தபோது, பத்திரிகை போராளிகள்தான் கரோனா ஆபத்தையும், விளைவுகளையும் எச்சரிக்கும்விதமாக தெளிவான பார்வையை அளித்தனர். ஆனால் அதே அரசுகள்தான் தற்போது பத்திரிகையாளர்கள் மீதும், ஊடகத்தின் மீதும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றன.

மக்களின் உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்காக பொதுமுடக்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றுகூறி 55 பத்திரிகையாளர்கள் மீது, ’மிகப் பெரிய குற்றம்’ செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்த வாரணாசியில் உள்ள கிராமத்தில் பட்டினியால் மக்கள் வாடுவதாக வெளியான செய்திகளால் உத்தரப் பிரதேச அரசு கடும் கோபம் கொண்டுள்ளது. டோமாரி கிராமத்தில் மக்கள் படும் அவதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ’ஸ்குரோல்-இன் – போர்ட்டல்’ பத்திரிகையைச் சேர்ந்த சுப்ரியா ஷர்மாவுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் வெளியிட்ட பொது விநியோகச் சிக்கல்கள், அலுவலர்களின் செயல்படாத நிலை, உணவு விநியோகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை.

அரசு இயந்திரத்தின் குறைபாடுகளையும், மக்கள் பணிகளில் உள்ள ஓட்டைகளையும் சரியாகப் பத்திரிகைகள் எடுத்துக் கூறின. ஆனால், மாயாதேவி என்ற பெண் இதை மறுத்ததுடன், தான் செய்திகளில் தவறாகச் சித்திரிக்கப்பட்டதாக அந்த பத்திரிகையாளர் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. கொடுமைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269 (வாழ்வை அச்சுறுத்தும் செயல்), 501 (அவதூறாகச் செய்தி வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இரண்டு வழக்குகள் ‘தி வயர் பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது பதியப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆதித்யநாத் பொதுமுடக்க விதிகளை மீறி மார்ச் 25ஆம் தேதி அயோத்தியில் நடந்த மிகப்பெரிய கூட்டத்தில் கலந்துகொண்டதாக அவர் செய்தி வெளியிட்டிருந்தார். கொடிய நோய்த்தொற்றான கரோனாவுக்கு எதிராக அனைத்து போராளிகளும் ஒன்றுசேர்ந்து களத்தில் நின்று போராடும் நேரத்தில், அவர்கள் மீதே பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசுகளின் போக்கு எதைக் குறிக்கிறது?

”உண்மை முகாந்திரத்துடன் உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு பத்திரிகைகளுக்கு சுதந்திரம் உள்ளது. (தவறான சூழல்களில் கருத்துகள் கூறினாலும்), இதுதான் உண்மையான கருத்து சுதந்திரம்!’ என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது பத்திரிகையாளர்களை வஞ்சிக்கும் நோக்கில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டவிழ்க்கும் சூழலால், அறிஞர்களும் ஆய்வாளர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று எடிட்டர்ஸ் கில்டு கவலை தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய சமூக அச்சுறுத்தல் நேரங்களில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு வெளிச்சமூட்டும் போராளிகளாக உள்ளனர். முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் ஜனநாயக நாடுகளில் இவர்களது பங்கு அளப்பரியது. குறைந்த நடவடிக்கைகளில் பெரிய பலன்களைப் பெற வேண்டுமெனில், பத்திரிகை, ஊடகத்தினரின் பங்களிப்பைப் போற்றி அவர்களது கருத்து சுதந்திரத்திற்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் நேர்மையை மதிக்க வேண்டும் என்று பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார்.

“நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்கள் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த உரிமையை நசுக்கும் செயல்களில் எந்த அரசும் ஈடுபடாதவண்ணம் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்” என்று 35 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

“அரசு இயந்திரத்தின் மீது விமர்சனங்களை வைப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது வன்முறையாக மாறும்போதுதான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தனைக்கு பிறகும், தங்களால் ஜீரணிக்க முடியாக கசப்பான உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பத்திரிகைகளின் சுதந்திரத்தை நசுக்கி, ஜனநாயக மதிப்புகளையும், மனித உரிமைகளையும் புறக்கணிக்கின்றன அரசுகள். இதை மறுக்கிறீர்களா?

இதையும் படிங்க: மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.