உத்தரப்பிரதேச மாநிலத்தின்அமேதி மக்களவைத்தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோல்வி உறுதியானதால்தான் தென்னிந்தியாவில் மற்றொரு தொகுதியில் ராகுல் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிகுற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை தங்கள் மாநிலங்களில் போட்டியிடக்கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் வயாநாடு மக்களவைத்தொகுதியில் ராகுல் காந்தி களம் இறங்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரளமுதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், பாஜகவை தோற்கடிக்க தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணையும்போது ராகுல் கேரளாவில் போட்டியிட்டால் அது கம்யூனிஸ்ட் கட்சியைத்தோற்கடிக்கதான் என தவறானப் புரிதல் மக்களிடையே சென்றடையும் என்றார்.
1978ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வடஇந்தியாவை தவிர்த்து தென்னிந்தியாவில் கர்நாடகா மாநிலம் சிக்மங்களுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதேபோல் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 1999ஆம் ஆண்டு வடஇந்தியாவை தவிர்த்து தென்னிந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெல்லாரி தொகுதியில்போட்டியிட்டு சுஷ்மா சுவராஜைதோற்கடித்ததுகுறிப்பிடத்தக்கது.