2007ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்தியில் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு வருவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிறுவனத்திற்கு முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ 2017ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை பதிவு செய்தது. மேலும், 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. இதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். பானுமதி, ஏஎஸ் போபன்னா அடங்கிய அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு - ஆவணங்களை ப.சிதம்பரத்திடம் ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு