அபிஜித் பானர்ஜி
பொருளாதாரத்துக்கான உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்பட மூன்று பேருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
உலகில் நிலவும் வறுமைக்கு எதிரான ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படவுள்ளது. அபிஜித் பானர்ஜி அமெரிக்காவில் வசித்துவருகிறார்.
தாயார் நெகிழ்ச்சி
எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கீரிமர் ஆகியோர் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் வறுமை ஒழிப்பு குறித்த ஆய்வுகள் நடத்திவருகின்றனர். சமூகத்திற்கு இவர்கள் அளித்த மாபெரும் பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அபிஜித் பானர்ஜியின் தாயார் நிர்மலா, அளித்த பேட்டியில், ''வறுமையை அகற்ற சிறந்த பங்களிப்பு அளித்த எனது மகனுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருப்பது மன மகிழ்ச்சியைத் தருகிறது. நான் அவனிடம் இன்னமும் பேசவில்லை. ஆனால் நேற்று இரவு பேசினோம். அப்போது அவன் இதுகுறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் என்னிடம் முன்னரே அறிவித்து இருக்க வேண்டும். இதுகுறித்து நான் அவனிடம் நிச்சயம் கேட்பேன்" என்றார் உரிமையாக.!
இதையும் படிங்க: Noble Price 2019: இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள்
மேலும், ''அபிஜித் 2017ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமைப் பெற்றார். அவர் தனது குடியுரிமையை மாற்ற தயங்கினார். இன்றும் மனதளவில் அவர் இந்தியராகவே இருக்கிறார்". என்றும் கூறினார்.
கல்வி
அபிஜித் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். 1988ஆம் ஆண்டு அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
அதன் பின்னர் அவரது பொருளாதார ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகன் ஆனார்.
அமர்த்தியா சென்
1998ஆம் ஆண்டு இந்தியர் அமெர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #NobelPrize2019 : மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!