இந்தாண்டு உலக மக்களை அச்சுறுத்தும் ஆண்டாக அமைந்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களின் கை மோலோங்கி இருக்கிறது. புல்வாமா தாக்குதல், இலங்கை குண்டுவெடிப்பு என பயங்கரவாதிகளால் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகம். தொடர் பயங்கரவாத சம்பவங்களுக்கு பிறகும் இந்த அச்சுறுத்தல் ஓயவில்லை. மீண்டும் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்ரீநகர், அவந்திபோரா பகுதியில் உள்ள விமானப்படை தளத்தை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விமானப்படை தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் போல இந்த முறையும் அஜாக்கிரதையாக் இருக்கக் கூடாது என்று பாதுகாப்பு பணியை விரைந்து செயல்படுத்தி இருக்கின்றனர்.