இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதுபோன்ற சூழ்நிலையில், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாக பொய்யான தகவல்களை மாநில அரசு கூறுவதற்குப் பதிலாக வெளிப்படையாக உண்மைகளைக் கூற முன்வர வேண்டும்.
தலைநகர் லக்னோவில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு, கரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்புப்பணிகள் செய்வதாக பொய் கூறாமல், மக்கள் பணியாற்றவேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை, பாஜக அரசு பின்பற்ற வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்குச் சிறப்பு சிகிச்சைகளை வழங்க இரண்டு லட்சம் மருத்துவப் படுக்கைகள் தயாராக இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆனால், உண்மை நிலை வேறாக உள்ளது.
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்களுக்குக்கூட உரிய படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்ற கூற்றை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். வெற்றுத்தனமான அறிக்கைகள், புள்ளி விவரங்களை வெளியிட வேண்டாம்.
அரசு தரப்பில் தொடர்ந்து தவறான கணக்கீடுகளை வெளியிடாமல் இப்போதாவது கடமையை ஆற்றுங்கள்" என வலியுறுத்தினார்.