உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்குப் பின் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.
இதுவரை, அங்கு கோவிட்-19 தொற்றால் 621 பேர் பாதிக்கப்பட்டும், 10 பேர் உயிரிழந்தும் உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் இன்று கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் பகுதிகளுக்கு சென்று, அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை மற்றும் உணவு போன்றவற்றை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்களின் பணிகளை பாராட்டி, அவர்கள் அனைவரையும் தலைமைச் செயலர் ஊக்குவித்தார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டைப் பின்பற்றி ஊரடங்கு அறிவிக்கப்படும்' - முதலமைச்சர் நாராயணசாமி