கரோனா தொற்று தாக்கத்தால் பெருமளவு இழப்பைச் சந்தித்துவரும் விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ தனது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை அறிவித்தது.
இது தொடர்பாக அந்நிறுவன முதன்மைச் செயலர் ரோனோஜோய் தத்தா எழுதிய கடிதத்தில் தனது ஊதியத்தை 25 விழுக்காடு குறைத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். பிற ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது. 10 விழுக்காடு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஊழியர்களுக்குச் சம்பளமற்ற விடுப்பு, பணி நேரத்தை அதிகரித்தல், சம்பளமற்ற பணி வழங்குதல் எனப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊதியக் குறைப்பு இன்னும் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், ரோனோஜோய் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் வழங்க முடியும் என்று தெரிந்தே அதற்கு மேம்பட்ட வருவாயை எதிர்பார்த்து, 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியமில்லா விடுப்பை அகற்றுகிறோம்.
நாங்கள் இன்னும் தொடமுடியாத தூரத்தில் இல்லை, நிச்சயமாக சரியான திசையில் செல்கிறோம். கடந்த ஆறு மாதத்தில் சொல்ல முடியாத வகையில் விமான நிறுவனம் ஒரு பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இருப்பினும் இந்த இழப்பிலிருந்து மீள உறுதியான முயற்சியோடு மீண்டும் உயர்ந்து செல்ல உறுதி ஏற்போம்.
ஊழியர்கள் ஒன்றிணைந்து அடுத்த ஆண்டு முதல் பாதியில் விமான நிறுவனம் லாபம் ஈட்டுவதை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு