ETV Bharat / bharat

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை - வேலையின்மை

ஹைதராபாத்: இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஏப்ரல், மே மாதங்களை காட்டிலும்  ஜூன் மாதத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது  என்று இந்திய பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) மாதாந்திர தரவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அதிகரிக்கும்  வேலையின்மை
தொடர்ந்து அதிகரிக்கும்  வேலையின்மை
author img

By

Published : Jul 7, 2020, 12:59 AM IST

கிராமப்புற வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 10.5 விழுக்காடு ஆக இருந்தது, இது மே மாதத்தில் 22.5 விழுக்காடு ஆகவும், நகர்ப்புற வேலையின்மை 12 விழுக்காடு ஆகவும் இருந்தது.

இதையடுத்து ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தது, முதலீட்டாளர்களையும் ஆய்வாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தினார். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 12.2 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டதாக சிஎம்ஐஇ தரவுகள் தெரிவிக்கிறது.

பின்னர், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால், மே மாதத்தில் 2.1 கோடி வேலைகளும், ஜூன் மாதத்தில் 7 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டது.

இருப்பினும், மீட்கப்பட்ட 7 கோடி வேலைகளில், 39 லட்சம் அல்லது 5.5 விழுக்காடு மட்டுமே சம்பள வேலைகள், மற்ற அனைத்தும் மீட்பு பெரும்பாலும் முறைசாரா வேலைவாய்ப்பு மற்றும் விவசாய வேலைகளிலிருந்து வருகிறது என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டத்தட்ட 1.8 கோடி சம்பள வேலை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு ‘அதிகரிக்க முக்கிய பங்காற்றிதாக சிஎம்ஐஇ விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் வேலையின்மை உச்சத்தில் இருக்கும் என்றும் ஜூன் மாதத்தில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது என்றும்,

இதற்கிடையில், “ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் வீழ்ச்சியடைந்தாலும், ஏற்கனவே வேலை இழப்பு விகிதங்கள் மார்ச் மாதத்தில் 8.75 விழுக்காடு ஆகவும் பிப்ரவரியில் 7.76 விழுக்காடு ஆகவும் உள்ளது” என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மையத்தின் தலைவரான அமித் பசோல் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 6.1 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு சர்ச்சைக்குரிய ஊடக அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.

இது 2019 ஜனவரியில் வேலையின்மை அதிகளவில் உயர்ந்துள்ளதை சுட்டிகாட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.ஐ.டி ஹைதராபாத்தில் ஆராய்ச்சி கலத்தை நிறுவும் டிஆர்டிஓ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.