உலகளாவிய ஊழல் எதிர்ப்பு இயக்கமான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு 180 நாடுகளை ஆய்வு செய்து ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியல் 2020 வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் ஊழல் குறியீட்டு பட்டியலில் (சிபிஐ) ஒவ்வொரு நாடும் பெற்றுள்ள புள்ளிகளுக்கு ஏற்றவாறு தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
அதென்ன ஊழல் குறியீட்டு பட்டியல்?
- ’0’ புள்ளி- மிகுந்த ஊழல் உள்ள நாடு
- ’100’ புள்ளிகள்- ஊழல் அற்ற நாடு
இந்தப் பட்டியலில் இந்தியா 40 புள்ளிகளைப் பெற்று 180 நாடுகளில் 86ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நியூசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் 88 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், சோமாலியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் 12 புள்ளிகளைப் பெற்று 179ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஊழல் குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளின் புள்ளிகள், அந்தந்த நாட்டில் நிலவும் துல்லியமான ஊழல் அளவைக் குறிக்கவில்லை. மாறாக, அந்த நாட்டில் நிலவும் ஊழலுக்கான சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியாவும், சீனாவும் 80ஆவது இடத்தை பிடித்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:'அனைத்துவித சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு' - பிரதமர் மோடி