ETV Bharat / bharat

விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட 10 செயற்கோள்கள் : இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்! - 10 செயற்கோள்கள்

இன்று (நவ.07) விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இஓஎஸ்-01 செயற்கோள் ஆர்பிட்டில் நிலை நிறுத்தப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

indias-one-more-eye-in-sky-radar-imaging-satellite-and-9-foreign-sats

author img

By

Published : Nov 7, 2020, 7:09 PM IST

Updated : Nov 7, 2020, 7:19 PM IST

ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலம் 10 செயற்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

அதில் இந்தியாவின் இஓஎஸ்-01 செயற்கோள், லுதுவேனிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிற்நுட்பக் கண்டுபிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேசின் நான்கு கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள், அமெரிக்காவின் நான்கு லெமூர் செயற்கோள்கள் ஆகியவையும் அடங்கும்.

இந்த இஓஎஸ்-01 செயற்கைகோள், புவியைக் கண்காணிப்பதற்காக தரமான புகைப்படங்களை அனுப்பும் எனவும், விவசாயம், காடுகளைக் கண்காணித்தல், பேரிடம் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஓஎஸ்-01 செயற்கோள் பிரிந்தபோது
இஓஎஸ்-01 செயற்கோள் பிரிந்தபோது

இந்த இஓஎஸ்-01 செயற்கைக்கோளில் பொறுத்தப்பட்டுள்ள சின்திட்டிக் அபெர்சர் ரேடார், அனைத்து வெப்ப சூழலிலும் புகைப்படங்கள் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த செயற்கைகோளினால் காலை, இரவு நேரங்களிலும் புகைப்படங்கள் எடுக்க முடியதோடு, மக்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டின் எடை 259 டன், இதன் உயரம் 44.4 மீ ஆகும். சரியாக இன்று மதியம் 3.12 மணிக்கு சதீஷ் தவான் ராக்கெட் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஓஎஸ்-01 செயற்கோள் ஆர்பிட்டில் நிலை நிறுத்தப்பட்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டது.

ஆர்பிட்டில் நிறுத்தப்பட்ட இஓஎஸ்-01 செயற்கோள்

  • சரியான 3.31 மணியளவில், பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் இந்தியாவின் இஓஎஸ்-01 செயற்கைகோளையும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளின் செயற்கைகோள்களையும் வெளியேற்றியது.
  • இன்றைய தேதி வரை வணிக ரீதியாக மற்ற நாடுகளின் 328 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.
  • பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது நான்கு நிலை என்ஜின்களை கொண்டு திட, திரவ எரிபொருள்களைக் கொண்டு இயக்கப்படுவதாகும். அதேபோல் இந்த ராக்கெட்டில் ஆறு பூஸ்டர் மோட்டார்கள் இணைக்கப்பட்டு, ராக்கெட்டின் ஆரம்ப நேரத்தில் உந்துதலைக் கொடுக்கக் கூடியது.
  • ஆனால் சனிக்கிழமையன்று விண்ணில் ஏவப்பட்ட 44.4 மீ உயரம் உள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட் டி.எல் வேரியண்ட்டில் இரண்டு ஸ்ட்ராப்-பூஸ்டர் மோட்டார்கள் மட்டுமே இருந்தது.
  • ராக்கெட்டில் செய்யப்பட்ட இந்த மாறுபாடு, 2019ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மைக்ரோசாட் ஆர் செயற்கைக்கோளை ஆர்பிட்டில் வைப்பதற்காக முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
  • செயற்கைகோள்களின் எடை மற்றும் எந்த ஆர்பிட்டில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதைப் பொறுத்தே ராக்கெட்டின் வகை அமையும்.

இதையும் படிங்க: 10 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-49

Last Updated : Nov 7, 2020, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.