சராசரியாக ஒரு சிம்பன்சியின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் டெல்லியிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில், ரீட்டா எனப்படும் சிம்பன்சியானது 59 வயதைத் தாண்டியும் உயிர் வாழ்ந்துவருகிறது.
இந்நிலையில் அது முதுமைக் காரணமாக சில உடல்நலச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ளும் நிலையில் தற்போது ரீட்டா உள்ளது.
கடந்த ஜூலை 27 முதல் பலவீனமாகக் காணப்பட்ட ரீட்டா, அதிகமாக நடமாடாமல் எப்பொழுதும் சோர்வாகவே காணப்பட்டது என்று கூறிய உயிரியல் பூங்கா அலுவலர் ஒருவர், இதனால் ரீட்டாவுக்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டுவருவதாகவும் அதற்கென்று தனி மெத்தையும் காணொலிகள் பார்க்க தனி தொலைக்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நெதர்லாந்தில் 1960இல் பிறந்த ரீட்டா, ஆம்ஸ்டர்டம் உயிரியல் பூங்காவிலிருந்து 1990ஆம் ஆண்டு டெல்லி உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமல்ல 'ஆசியாவிலேயே முதுமையான' சிம்பன்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #5YearsOfMadras - கல்விதான் நமக்கான அதிகாரத்தை பெற்றுத் தரும்!