ஹிமாசலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லா இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடம் என்றால் மிகையாகது. இந்த நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடைக்கால தலைநகராக இருந்துள்ளது. அப்போது அங்கு இந்தியாவின் முதல் தானியங்கி தொலைபேசி பரிமாற்ற நிலையத்தை ஆங்கிலேயர் 1930-இல் கட்டியுள்ளனர்.
சுமார் 2ஆயிரம் இணைப்புகளை கையாண்ட இந்த நிலையத்தில் முதன் முறையாக இங்கிருந்து அப்போதைய சிம்லாவின் வைசிராய் இங்கிலாந்திற்கு பேசியுள்ளார். இந்த கட்டடத்தில் ஒரு பெரிய கடிகாரத்தையும் பொருத்தியுள்ளனர். பின்னாளில் இந்த கட்டடம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொரைபேசி நிலையமாக மாறிப்போனது.
இருந்தும் இன்றும் பழமை மாறது எழுச்சியுடன் இக்கட்டடம் காட்சியளிக்கிறது. அதற்கு சான்றாக இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் லத்தீன் மொழியால் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.
இதையும் படிங்க...ரத்தானது பொதுத் தேர்வு - குதூகலத்தில் மாணவர்கள்..!