ETV Bharat / bharat

கரோனா காலத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - உஷாராக இருக்க அறிவுறுத்தல்

கரோனா பரவல் காரணமாக, அனைவரும் நேரடி பணப் பரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளதால், சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்
author img

By

Published : Nov 22, 2020, 2:54 PM IST

Updated : Nov 22, 2020, 3:00 PM IST

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால், சாலையோரம் உள்ள கடைகள், உணவகங்கள் என பெரும்பாலான இடங்களில், வாடிக்கையாளர்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். டிஜிட்டல் முறைக்கு மக்கள் மாறுவது, ஒருவிதமான முன்னேற்றம் என்றாலும், இதுபோன்ற சூழலில் சைபர் குற்றங்கள் (cybercrimes) அதாவது இணையவழிக் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும், இதுபோன்ற சைபர் குற்றங்கள் வழியாக இந்தியர்களை ஏமாற்றி ரூ. 1.2 லட்சம் கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3.4 சதவிகிதம் அதிகரித்து 74.3 கோடியாக உள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில சைபர் க்ரைம் காவல் துறையினர் கூறுகையில், "நாடு முழுவதும் 1.2 பில்லியன் பேர் (100 கோடிக்கும் அதிகமான) ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினமும் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்." என்றனர்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் பதிவான சைபர் குற்றங்கள்

2017- 350

2018- 207

2019- 244

2020 அக்டோபர் மாதம் வரை - 260

பல்வேறு வழிகளில் மக்கள் தங்களது பணத்தை பறிக்கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக, கரோனா காலங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் மக்கள், போலியான இணையதள முகவரியின் மூலம் தங்களது பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள்.

அதேபோல, கேள்விப்பட்டிராத இணையதளங்கள் (Websites) மூலம் சாப்பிங் (shopping) செய்து சிலர் தங்களது பணத்தை இழக்கிறார்கள். இதுபோன்ற இணைதளங்கள், மக்களை கவருவதற்காக பிரபல நிறுவனங்களின் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்குவதாக கூறி விளம்பரம் செய்கின்றனர்.

மேலும், தங்கள் இணையதளம் மூலம் எளிதில், பாஸ்போர்ட், லைசன்ஸ், ஆதார் அட்டைப் பெறுங்கள் என செல்போன்/லாப்டாப் திரையில் தோன்றும் விளம்பரங்களை நம்பி சிலர் ஏமாறுகிறார்கள். சில கொள்ளையர்கள், தாங்கள் வங்களில் இருந்து பேசுவதாகவும், வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் எனக்கூறி, மக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடிப் பணம் பறிக்கிறார்கள்.

தேசிய குற்ற ஆவணக் ‌காப்பகம் அளித்துள்ள தகவலின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 44,546 சைபர் க்ரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு 28,248 வழக்குகளும், 2017ஆம் ஆண்டு 21,796 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

கஸ்டமர் கேர் அழைப்பேசி எண்ணைப்பெறுவதற்காக, கூகுள், யாகு போன்ற சர்ச்இன்ஞ்சின்களில் தேடக்கூடாது. ஏனெனில் அதில் வரும் எண்கள் பெரும்பாலானவை இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவையாக இருக்க வாய்ப்பு உண்டு.

பல சைபர் குற்றவாளிகள், பேஸ்புக், ட்விட்டர் பயனாளர்களின் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பயனாளரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை பறிப்பார்கள். அதேபோல, சமூக வலைதளங்களில், தனிநபர் தகவல்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் இணையதளங்கள் குறித்து தொடர்ந்து நோட்டமிட்டு, ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவார்கள். அதேபோல், தங்களது பெயருக்கு பரிசு வந்துள்ளதாக, கூறி வரும் மெசேஜ்களையும், இமெயில்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு வரும் மெசேஜ்கள் மக்களின் வீட்டு முகவரி, தொலைப்பேசி எண் போன்ற தகவல்களை பெற்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

உத்தரகாண்ட மாநிலத்தில், குறைந்தபட்சம் 100 வழக்குகள் இவ்வாறு பதிவாவதாக, அம்மாநில சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அதேபோல சிலர் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது வழக்குப்பதிவு செய்ய முன்வருவதில்லை என்றும், இதனால் குற்றவாளிகள் அச்சம் இன்றி தொடர்ந்து குற்றச் செயல்களைத் தொடர்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது செய்யவேண்டியவை:

1. பாதிக்கப்பட்டவர், தனது வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு கூற வேண்டும்

2. வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை எப்பொழுதும் தொலைபேசியில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே தான், நாம் உடனடியாக புகார் அளிக்க முடியும்.

3. அருகே உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் க்ரைம் பிரிவைத் தொடர்புகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: ஆட்சியர் கேட்கிறார்: அமேசான் பரிசுக் கூப்பன் - உலாவும் சைபர் கொள்ளையர்கள்!

Last Updated : Nov 22, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.