ETV Bharat / bharat

உலகளவில் கவனம் ஈர்க்கும் கோவாக்சின் தடுப்பூசி! - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

டெல்லி: கரோனாவிற்கு எதிரான இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்
author img

By

Published : Dec 25, 2020, 12:09 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொது மக்கள் பயன்பாடிற்கு வரும் என்று, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பரிசோதனை பணிகள், இந்தியாவில் மூன்றாம் கட்டத்தில் உள்ளன. இப்பரிசோதனையின்போது தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அவற்றின் செயல்திறன், தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை பரிசோதிக்கப்படும்.

இந்தநிலையில், இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவேக்சின், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்தும் தரவுகள் உலக நாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மற்றொரு ட்விட்டில், "முதலாம் கட்டம், இரண்டாம் கட்ட கோவாக்சின் சோதனை முடிவுகள் இந்தியாவில் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்கான பாதையை அமைத்துள்ளன. இது தற்போது 22 தளங்களில் நடந்து வருகிறது."

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசி 'கோவாக்சினின்' மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 6-12 மாதங்கள் வரை பயனளிக்கும் கோவாக்சின் - பாரத் பயோடெக் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.