இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த வாரம் யெஸ் வங்கியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சரிவை சந்தித்தன. பங்குச் சந்தைகள் இந்த வாரம் மீளும் என்று நம்பியிருந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
சற்று முன் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,321 புள்ளிகள் குறைந்து 35,255 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 623 புள்ளிகள் குறைந்து 10,365 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துவருவது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துவருகின்றன.
வர்த்தக நேரம் முடிவடைய இன்னும் இரண்டு மணி நேரமே இருப்பதால், பங்குச்சந்தைகள் மீள்வது மிகக் கடினம் என்பது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து.
இதையும் படிங்க: இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமேசான்