இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் காணொலி மூலமாக இன்று (நவ. 3) செயதியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தாண்டு இந்தியன் ரயில்வே பயணிகள் பிரிவில் மூலம் மூன்றாயிரத்து 322 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட, 90 விழுக்காடு குறைவாக உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக அமல்ப்படுத்தப்பட்ட ஊராடங்கல் இந்த வருமானம் குறைந்துள்ளது.
இதனையடுத்து, தற்போது பண்டிகைக் கால சிறப்பாக 736 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை இயங்கவுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 2020 இல், கொல்கத்தா ரயில்வேயின் 200 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், முழு ரயில்வே பயணிகள் சேவை எப்போது தொடங்கும் என கேட்டக் கேள்விக்கு பதிலளித்த வினோத் குமார் யாதவ், ரயில்வே துறை மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இதனால் கரோனா வைரஸ் பரவல் குறைந்தால் மட்டுமே தொடங்குவது குறித்த தேதி முடிவெடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் கொலை வழக்கு - உதவி ஆய்வாளருக்கு பிணை மறுப்பு!