ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டதாகக் கூறி ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, போர்க்ப்பல்களில் பணிபுரியும் கடற்படை வீரர்கள் சமூக வலைதளமான பேஸ்புக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. துறைமுகம், கடற்படை தளம், போர்க்கப்பல் ஆகியவற்றில் ஸ்மார்ட் போனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் எதிரிநாட்டைச் சேர்ந்த உளவுத் துறைக்கு ரகசிய தகவல்கள் கசியவிட்டப்பட்டதை அடுத்து இந்தக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிசம்பர் 20ஆம் தேதி பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏழு கடற்படை வீரர்களை ஆந்திர காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ’உத்தரப் பிரதேச ஏடிஜிபிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’