ETV Bharat / bharat

இந்தியாவின் மாபெரும் கனவு சாவித்ரிபாய் பூலே! - சாவித்ரிபாய் இந்திய சமூகத்தின் கனவு

வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பெண்ணின் வரலாறு. இந்திய அரசு நினைத்தால் அன்னை சாவித்ரிபாய் பூலேவின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாட வழிவகுக்கலாம்.

savitri bhai pule
savitri bhai pule
author img

By

Published : Jan 3, 2020, 8:50 PM IST

இந்தியாவில் சாதி, மதம் இருக்கும் வரை சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மக்களின் ரத்தத்தில் சாதி ஊறிக் கிடக்கிறது. அறுவை சிகிச்சையினால் மட்டுமே சாதியை அழித்தொழிக்க முடியும். நான்கு வர்ணங்களால் பிளவுப்பட்டு மக்கள் அனைவரும் அகவர்ணனைக்குள் மூழ்கி கிடக்கிறார்கள். பிராமணர்கள், சத்திரியர்கள், வைசிரியர்கள், சூத்திரர்கள் என்ற பிம்பத்தை ஒழிக்காத வரை சமூக நல்லிணக்கத்தை பேச்சில் மட்டுமே காண முடியும்.

படிம நிலைகளால் சாதி சிக்கலில் இன்னல்களுக்கு ஆளானவர்கள் பட்டியலின மக்கள்தான். ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களின் எதிரே இவர்கள் வந்தால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற முறை மிகக்கொடியதாகவே இருந்தது. அடிமைத்தனத்தை விட மிகக்கொடுமையானது பெண் அடிமைத்தனம். உயர்ந்த வகுப்பு, தாழ்ந்த வகுப்பு எந்த பிரிவில் பெண்கள் வாழ்ந்தாலும் 1800ஆம் ஆண்டுகளில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஒரே மாதிரிதான் கடைப்பிடிக்கப்பட்டது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாக பார்க்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களை விட தாழ்த்தப்பட்டவளாக பெண் கருதப்பட்டாள்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் தனக்கான தடைகளை உடைத்தெறிந்து சமூக சீர்திருத்தம் பேசிய இரும்பு பெண்மணியாகவும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் திகழ்ந்தவர்தான் சாவித்ரிபாய் பூலே. பெண்கள் படிக்கச்சென்றால் மாட்டு சாணத்தை வாரி அடிக்கும் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து, ஒரு புரட்சி பெண்ணாக ஆண்களுக்கு நிகராக பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.

சாவித்ரி பாய் பூலே 1831 ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நைகோன் கிராமத்தில் பிறந்தார். அசாதாரணமான சூழ்நிலைக்கு அஞ்சும் வாழ்வை நாம் வாழ்கிறோம். அந்தக் கால முறைப்படி 9 வயதில் (1840) மகாத்மா ஜோதிராவ் பூலேவை திருமணம் செய்து கொண்டார். தனது சிறுவயது முதலே சுறுசுறுப்பாய் இருக்கும் சாவித்ரி பாய்க்கு கல்வி முறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்தது. கல்வியில் மட்டும் சிறந்தவர் அல்ல நல்ல கவிஞரும் கூட.

தனது கணவர் ஜோதிராவ் பூலேவிடம் கல்வி கற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து 1847ஆம் ஆண்டு தனது 17 வயதில் ஆசிரியர் ஆனார். கல்வி என்பது எல்லோரிடத்திலும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. பெண் கல்வி ஒன்றே சமூக மாற்றத்துக்கு வித்திடும் என்பதை பகுத்து ஆராய்ந்து, தன் கணவர் ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து 1848 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒரு பள்ளியை தொடங்கினார். 19ஆம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியறிவை புகுத்துவது சாதாரண காரியமல்ல. சாவித்ரி பாய் பூலே ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு ஆசிரியராக செல்லும்போதும், ஆதிக்க சாதி ஆண்களால், மாட்டு சாணம், கற்கள், அழுகிய காய்கறிகள் போன்றவற்றால் தாக்கப்பட்டார்.

கேட்க முடியாத வசை சொற்களாலும் பல இன்னலுக்கு ஆளானார். இதுகுறித்து தனது கணவரிடம் முறையிடவே, பள்ளிக்கு செல்லும்போது ஒரு புடவையை கையில் எடுத்துக்கொண்டு அழுக்கு புடவையை கட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்வார். பள்ளியில் சென்று உடையை மாற்றிக்கொண்டு பாடம் எடுப்பார். பின்பு மீண்டும் பழைய புடவையை உடுத்திக்கொண்டு வீடு திரும்புவார். கல்வி ஒன்றே ஆயுதம், அதனை ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க அனைத்து சவால்களையும் எதிர்கொண்டார் சாவித்ரிபாய் பூலே.

சாவித்ரிபாய் பூலே மீது வீசப்படும் சாணம்
சாவித்ரிபாய் பூலே மீது வீசப்படும் சாணம்

1853ஆம் ஆண்டு சாவித்ரிபாய் பூலே தனது 22 வயதில், மகாத்மா ஜோதிராவ் பூலேவுடன் இணைந்து கல்விக்கான சங்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு வாழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக பள்ளியை தொடங்கியவர்கள் இவர்கள்தான். இவர்களின் புரட்சி ஒளியில் பழமைவாதிகளின் கண்கள் பொசுங்க ஆரம்பித்தன. புனேவில் ஆன்மீக வைதீக கருத்தியலால் தாக்கப்பட்ட விதவைகள், குழந்தை திருமணம் செய்து கைவிடப்பட்ட சிறுவயது பெண் குழந்தைகள், சிறு வயதிலேயே விதவையான சிறார்கள், இவர்கள் சமூகத்தில் 'பழி'யை சுமக்கும் வாழ்வை வாழ்ந்தனர்.

பழி பாவ இழிவை சுமந்த பெண் சமூகம் தன் விடுதலைக்கான வழியை கண்டது. 1864ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு காப்பகம் உதயமானது. இதன்மூலம் சமூக மாற்றத்துக்கான மாபெரும் அடையாளத்தை வரலாற்றில் பதித்தனர். அந்தக் காப்பகத்தில் பிராமண பெண்ணின் குழந்தை யஷ்வந்தை தத்தெடுத்துக்கொண்டனர்.

கல்வி கற்று கொடுக்கும் அன்னை சாவித்ரிபாய் பூலே

சமூக நீதிக்காக போராடும் வாழ்வே நிம்மதியை தரும் வாழ்வு என்பதை உணர்ந்து சாவித்ரிபாய் பூலேவும், ஜோதிராவ் பூலேவும் 1868இல் தனது வீட்டிலேயே ஒரு கிணறு கட்டி அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள். சமத்துவத்தின் சின்னமாய் அந்த கிணறு விளங்கியது. ஜோதிராவ் பூலேவின் லட்சிய இயக்கமான சத்தியசோதாக் சமாஜ் இன் (சாதியை அழித்தொழிக்கும் சங்கம்) முக்கிய தூணாக விளங்கியது. இதன் மூலம் இருவரும் இணைந்து 1873ஆம் ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணங்கள் பலவற்றை நடத்தினார்கள்.

1890ஆம் ஆண்டு மகாத்மா ஜோதிராவ் பூலே இறந்த பிறகு அவரது இலட்சியங்களையும், நினைவுகளையும் சுமந்த வண்ணம் தனது போராட்ட வாழ்வை தொடர்ந்தார் சாவித்ரிபாய் பூலே. பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சாவித்ரிபாய் பூலே 1897ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி 66 வயதில் மரணமடைந்தார்.

வசதிக்கு ஏற்றார் போல் தன் கொள்கைகளை மாற்றிக்கொண்டு வாழும் போலிகள் இருக்கும் இச்சமூகத்தில், தான் கொண்ட கொள்கையே மேலானது. அடிப்படை சிக்கலான சாதி , பெண்ணடிமை சிக்கலே முதன்மையானது, சமத்துவமும், சமூக நீதியுமே ஒற்றை தீர்வு என்று முழங்கிய அன்னை சாவித்ரிபாய் பூலே பெண் சமுதாயத்துக்கு மட்டுமல்ல சமூக நீதிக்காக போராடும் மக்கள் அனைவருக்கும் அவர் முன்னோடி.

ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.