ETV Bharat / bharat

டொனேஷன் வாங்க ட்ரம்ப் இந்தியா வருகை - யூஎஸ் நிபுணர் யூகம் - அமெரிக்கா

வாஷிங்டன்: வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு அரசியல் நன்கொடைகளைப் பெறுவதற்கு டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்காவில் இந்திய புலம்பெயர்ந்தோர் ஒரு சிறந்த இலக்காக இருக்கக்கூடும் என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர் ரிச்சர்ட் ரோஸ்ஸோ தெரிவித்துள்ளார்.

Indian diaspora could be target market for Trump's donations: US foreign expert

author img

By

Published : Feb 24, 2020, 1:56 PM IST

அரசியல் நன்கொடைகளைப் பொறுத்தவரை, இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சிறந்த இலக்காக இருக்கக்கூடும், அது ஒரு பிரதான சந்தையாக இருக்காது. ஆனால் ஒரு நல்ல இரண்டாம் நிலை சந்தையாக இருக்கும் என்று அமெரிக்க-இந்தியா கொள்கை ஆய்வுகளின் தலைவர் ரோஸ்ஸோ வாத்வானி (சி.எஸ்.ஐ.எஸ்) டிரம்ப் இந்தியா வருவதற்கு முன்னதாக கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வளர்ந்து வரும் சமூகமான இந்திய புலம்பெயர்ந்தோரில், கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் இப்போது செல்வந்தர்களாக உள்ளனர் என்கிறார்.

இரு நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகள் குறித்து அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா இந்தியாவுக்கு பாதுகாப்பு பொருள் விற்பனையில் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறோம் என்றார்.

மேலும் அவர், இது அமெரிக்காவிற்கும் முக்கியமானது, ஏனெனில் இது ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணையை இந்தியா வாங்குவதை எதிர்க்கிறது . அமெரிக்காவின் எதிரிகளை பொருளாதாரத் தடைச் சட்டத்தின் (CATSA )மூலம் எதிர்கொள்வதில் இந்தியாவை அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் (அமெரிக்கா) நினைக்கிறோம் என்கிறார்.

ட்ரம்ப் வருகை குறித்து அவர், இது சமீபத்திய வர்த்தக தடைகளை நீக்க இந்த மினி வர்த்தக ஒப்பந்தம் உதவும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு மாற்றாக, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறையில் அமெரிக்காவிடமிருந்து புதிய பொருட்களை இந்தியா வாங்கப்போவதை கூடிய சீக்கிரம் அறிவிப்பதை நீங்கள் பார்க்க போகிறீரகள்.

ஆசியாவில் அதிகரித்து வரும் சில அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இரு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து வருகின்றன என்று நான் நினைக்கிறேன், இது மிக சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தூண்டுகிறது.

ட்ரம்ப் வர்த்தக சலுகைகளை ரத்து செய்த பின்னர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக விஷயத்தில் பதட்டங்கள் தோன்றின, அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தது.

எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கிடையில் பல சந்திப்புகள் இருந்தபோதிலும், இரு நாடுகளின் அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் 18 மாதங்களுக்குப் பிறகும் ஒரு ஒப்பந்தத்தில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்திய வர்த்தக தடைகளை நீக்க இந்த மினி வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்தியா புதியதாக அறிவிக்கப் போகும் வர்த்தக ஒப்பந்தங்களில் பாதுகாப்பு சம்பந்தமான பொருட்களை அமெரிக்காவிலிருந்து வாங்கும் என ரோஸ்ஸோ கூறினார்.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கமாக செல்லத் தொடங்கியதால் இந்தியா திடீரென பயப்படுகிறது. டிரம்ப் இந்தியாவுக்குச் செல்வதும், பாகிஸ்தானுக்குச் செல்லாததும் இந்திய அரசாங்கத்துக்கு ஒரு வெற்றி சின்னமாக இருக்கும் என்றும் ரோஸ்ஸோ தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.