மேலும் துணைத் தலைவர்களாக மூன்று வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்கள் விவரம்:
- ஜி ராஜ்கிரண் ராய் - யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
- எஸ் எஸ் மல்லிகார்ஜுனா ராவ் - பஞ்சாப் நேஷனல் வங்கி
- மாதவ் கல்யான் ஜெபி - மோர்கன் சேஸ் வங்கி
இவர்கள் தவிர, ஐடிபிஐ வங்கியின் தலைவரும், அவ்வங்கியின் நிர்வாக இயக்குநருமான ராகேஷ் ஷர்மா, சங்கத்தின் கௌரவச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வங்கிகளின் திறனை மேம்படுத்தவும் அனைத்து வங்கிகளை ஒருங்கிணைப்பதற்காகவும் இச்சங்கம் 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் கீழ் நாடு முழுவதும் 237 வங்கிகள் இயங்குகின்றன.