இந்தியா-சீனா ராணுவ உயர் அலுவலர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சமரசம் ஏற்பட்டதன்மூலம் சீன ராணுவம் ஆக்கிரப்பு பகுதிகளை விட்டு பின்வாங்கினாலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்துவது அதிமுக்கியம் என்பதால், குளிர் காலநிலையில் ராணுவத்தினர் தங்குவதற்கு ஏதுவான வகையில் கூடாரங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர்-அக்டோபர் காலக்கெடு வரை இந்த நிலைப்பாடு தொடரக்கூடும் என்று மூத்த ராணுவ அலுவலர்கள் கருதுகின்றனர்.
லடாக்கில் அமைந்துள்ள உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்தினர் அதிகளவில் பணியில் ஈடுபடுவது நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதியில் கூடாரங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் காலநிலை ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை வாங்குவதில் கவனம் செலுத்துவதால், கூடாரங்களுக்கான இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இந்தப் படை கவனித்து வருகிறது.
ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வாழ்விடங்கள் போன்ற எந்தவொரு பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாதுகாப்பு படையினருக்கு 500 கோடி ரூபாய் நிதி அதிகாரங்களை வழங்கியுள்ளது.
ராணுவம் தனது எம் -777 அல்ட்ரா-லைட் ஹோவிட்சர்கள் மற்றும் பல வகையான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்காக ரஷ்யா மற்றும் பிற உலகளாவிய விநியோகிப்பாளர்களிடம் இருந்து எக்ஸலிபூர் வெடிமருந்துகளை வாங்கப் போவதாக தகவல் வெளியுள்ளது.
கிழக்கு லடாக்கில் கனரக ஆயுதங்களுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா நிறுத்தியது. இதன் நெருக்கடியை உணர்நத இந்தியா தற்போது, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குதுப் மினார் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் விரைவில் திறப்பு!