கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். இதையடுத்து, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவத் தலைமையகம் (HQ), ராணுவ செயல்பாடுகள், ராணுவ புலனாய்வு (Military Intelligence), போர்த்திறன் சார்ந்த இயக்கக் மையங்கள் மட்டுமே செயல்படும். இருப்பினும், இங்கு பணிபுரியும் ஆள்களின் எண்ணிக்கையும், வேலை நேரமும் குறைக்கப்படும்.
மீதமுள்ள ராணுவ கிளைகளில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே வேலை செய்வார்கள். இந்த உத்தரவு ஏப்ரல் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பின்னர், ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை, அனைத்து ராணுவ துறைகளில் 50 விழுக்காடு ஆள்களுடன் பணி நடைபெறும்.
மக்கள் நலனுக்காக கரோனாவுக்கு எதிராக போராடும் பொது மருத்துவ சேவை இயக்குநரகம் (Directorate General Medical Services ) முழு ஆள்கள் பலத்துடன் தொடர்ந்து செயல்படும். ராணுவ கூடாரங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் ஊரடங்கு முடியும்வரை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'உடம்பைக் குறைக்க நடைபயணத்தை விட யோகா நல்லது' - காவல் துறையினரின் நூதன தண்டனை