இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,700 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல் 5.5 லட்சம் பேர் நோய்ப் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் கரோனா நிலவரம் குறித்து தேசிய அளவை ஒப்பிடும் போது, இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சட்டீஸ்கரில் 1.7%, கேரளாவில் 1.43% குறைந்துள்ளது.
அதேபோல் வட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பைவிட 2.09% விதமாக குறைந்துள்ளது. மேலும் கரோனா பரிசோதனைக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம்(ஜூலை 13) மட்டும் புதிதாக 4,382 பேருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.