ETV Bharat / bharat

மனித இனத்தை மீட்க அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - மோடி - India will do everything possible to help humanity's fight against COVID-19: PM Modi

டெல்லி: கரோனாவுக்கு எதிரான போரில் மனித இனத்தை மீட்டெடுக்க அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi
Modi
author img

By

Published : Apr 9, 2020, 12:10 PM IST

Updated : Apr 9, 2020, 1:04 PM IST

கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு அளிக்கப்படும் ’ஹைட்ரோகுளோரோகுயின்’ என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரைத்தது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்தது.

உலகத்திலேயே இந்த மருந்தை அதிகளவில் தயாரிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, இந்தத் தடையை திரும்பப் பெற கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. மேலும் இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக மிரட்டும் தொனியிலும் பேசியிருந்தார்.

  • Fully agree with you President @realDonaldTrump. Times like these bring friends closer. The India-US partnership is stronger than ever.

    India shall do everything possible to help humanity's fight against COVID-19.

    We shall win this together. https://t.co/0U2xsZNexE

    — Narendra Modi (@narendramodi) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடர்ந்து, ஏற்றுமதிக்கான தடை திரும்பப் பெறப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிபர் ட்ரம்புடன் முழுவதுமாக ஒத்து போகிறேன். இதுபோன்ற காலகட்டம் நட்பை மேலும் நெருக்கமாக்கும். இந்தியா, அமெரிக்க உறவு எப்போதுமில்லாத அளவுக்கு வலுவாக உள்ளது. மனித இனத்தை மீட்டெடுக்க அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா செய்யும். ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்" என பதிவிட்டுள்ளார்.

Last Updated : Apr 9, 2020, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.