அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் இரு நாள் அரசு முறை பயணமாக வரும் பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இந்தியா வரவுள்ளார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால், இப்பயணம் சர்வதேச அளவிவல் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசும் ட்ரம்பின் இந்த வருகையை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தும் வேலைகளில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ட்ரம்பின் இந்தியா வருகை இனி 'நமஸ்தே ட்ரம்ப்' என்றே அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது, 'கிம் சோ ட்ர்ம்ப் (எப்படி இருக்கீங்க ட்ர்ம்ப்)' என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் ட்ரம்ப்பின் வருகையை பிரபலப்படுத்த வேண்டும் என்பதால், குஜராத்தி மொழியில் இருந்த பெயர், அனைவருக்கும் புரியும்படி 'நமஸ்தே ட்ரம்ப்' மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வர்த்தக ஒப்பந்த்தை இறுதிசெய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் அலுவலர்கள்' - அமெரிக்க தூதர்