ETV Bharat / bharat

2+2 அமைச்சர்கள் உரையாடல்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

author img

By

Published : Oct 27, 2020, 10:39 AM IST

டெல்லி: அமெரிக்க-இந்திய வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையிலான 2+2 மூன்றாம் கட்ட இருதரப்பு உரையாடல் இன்று (அக்.27) நடைபெறுகிறது. அப்போது, இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையில் புவிசார் தகவல் பகிர்வை விரிவுபடுத்துவதற்கான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2+2 அமைச்சர்கள் உரையாடல்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
2+2 அமைச்சர்கள் உரையாடல்: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் ஆகியோருடன் 2+2 பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று(அக்.26) டெல்லி வந்தனர்.

நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிழக்கு லடாக்கிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான ராணுவ போக்கு நிலவிவரும் சூழலில், இச்சந்திப்பு நடைபெறுகிறது.

அதே நேரத்தில், சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களும் அதிகரித்துள்ளன. அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டு, போரில் வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு மரியாதை அஞ்சலி செலுத்தவுள்ளனர். 2 + 2 அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

பின்னர் அமைச்சர்கள் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்தை நடத்துகின்றனர். இதன் பின்னர், அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு செல்லவுள்ளனர். முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், “இந்தியா-அமெரிக்கா இரு தரப்பினரும் புவி-இடஞ்சார்ந்த ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (BECA) கையெழுத்திடப்படும் என்று அறிவித்தது.

இது இருநாடுகளுக்கு இடையிலான புவிசார் ஒத்துழைப்பையும், ஏவுகணை அமைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவியாக அமையும்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்க 2 + 2 அமைச்சர்கள் உரையாடலில் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பகிர்வு, இரு நாட்டு ராணுவங்கள் இடையிலான தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் ஆகிய நான்கு கருப்பொருள்களில் பேச்சுவார்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.

நேற்று டெல்லி வந்த அமெரிக்க அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் "ராணுவத்திலிருந்து ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் தகவல் பகிர்வு, பாதுகாப்பு வர்த்தகம், தொழில்துறை பிரச்னைகள்" உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ததோடு, இருதரப்பு ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிகளையும் விவாதித்தனர்.

இதேபோல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோரும் சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். அதில் அமெரிக்க-இந்தியா இடையே விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் "பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக ட்விட் செய்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, மூன்றாவது அமெரிக்க- இந்தியா 2 + 2 அமைச்சர்கள் உரையாடலுக்கு முன்னதாக, ஒரு "சிறந்த கலந்துரையாடல்" நடத்தியதாகக் கூறினார். முக்கிய இருதரப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், சந்திப்பின்போது, கரோனா சவால்களை எதிர்கொள்வது, பிராந்திய பாதுகாப்பு, தடுப்பூசி, வளர்ச்சி மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2017 ஜூன் மாதம் வாஷிங்டன் டிசிக்கு விஜயம் செய்தபோது, இந்த புதிய வடிவத்தில்(2+2) உரையாடலை நடத்தஇரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.