ETV Bharat / bharat

இந்தியாவில் 77 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! - corona count in India

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்து 6 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.

cor
cor
author img

By

Published : Oct 22, 2020, 12:44 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 839 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 702 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்து 6 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 616ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 68 லட்சத்து 74 ஆயிரத்து 518ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்

கரோனா
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு 7 லட்சத்து 93 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 9 கோடியே 86 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மட்டும் சுமார் 14 லட்சத்து 69 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.