ETV Bharat / bharat

கரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்தது இந்தியாவில்தான் - சுகாதாரத் துறை - கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதிம்

டெல்லி: உலகிலேயே கரோனா தொற்றிலிருந்து அதிக நபர்கள் குணமடைந்தது இந்தியாவில்தான் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India tops the world in COVID-19 recoveries

author img

By

Published : Sep 21, 2020, 11:23 AM IST

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், உலகிலேயே கரோனா தொற்றிலிருந்து அதிக நபர்கள் குணமடைந்தது இந்தியாவில்தான் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Worldometers தரவுகளை குறிப்பிட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை 43 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 19 விழுக்காட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்" என்று பதிவிட்டுள்ளது.

Worldometers தரவுகளின்படி இதுவரை குணமடைந்த கரோனா நோயாளிகளில் 19 விழுகாட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதைத்தொடர்ந்து 18.70 விழுக்காட்டினர் அமெரிக்காவையும், 16.90 விழுக்காட்டினர் பிரேசிலையும் சேர்ந்தவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை செய்துகொள்ள வீதியில் நின்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.