ETV Bharat / bharat

'30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் இந்தியா'

டெல்லி: 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் 30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

India to produce 300 million doses of Sputnik V

author img

By

Published : Dec 18, 2020, 5:14 PM IST

ஸ்புட்னிக் வி என்ற கரோனா தடுப்பு மருந்திற்கு ரஷ்யா கடந்த ஆக்ஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், மூன்றாம்கட்ட மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பல நாடுகளும் தடுப்பு மருந்து குறித்த தனது சந்தேகங்களை வெளிப்படுத்தின.

இருப்பினும், ஸ்புட்னிட் கி தடுப்பு மருந்தின் சோதனைகளும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் பொறுப்பு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய பல நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், "இதற்காக நான்கு பெரிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் ஸ்புடனிக் வி தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 2021ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 30 கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே, கொரியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்புடனிக் வி தடுப்பு மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டன" என்றார்.

தற்போது வரை வெளியாகியுள்ள தரவுகளில், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து 91.4 விழுக்காடாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுடன் இணைந்து ரஷ்யா ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து சோதனைகளை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க: 'விவசாயிகளின் போராட்டத்தால் கரோனா குறைந்துள்ளது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.