நிலவு குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திராயன் 1, 2 ஆகிய விண்கலங்களை இந்தியா விண்ணுக்கு அனுப்பியது. நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்த திட்டமான சந்திராயன் - 3 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விண்ணில் ஏவ வாய்ப்புள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், சந்திரயான் 2 திட்டத்திலிருந்து கற்கப்பட்ட பாடத்தின்படி கடினமான சூழலில்கூட இயங்கும் நோக்கில் சந்திரயான் - 3 வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விண்வெளிக்கு செல்லும் 4 ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது என அவர் மக்களவையில் பதிலளித்தார். மனிதர்கள் இல்லாமல் விண்வெளிக்கு இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் ககன்யான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொழில்நுட்பக் கோளாறு: ஜிஎஸ்எல்வி - எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு!