ETV Bharat / bharat

அமெரிக்காவுடன் கைகோக்கும் இந்தியா!

இந்தியாவின் கருத்தாக்கம் என்ற பெயரில் நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்தியா
இந்தியா
author img

By

Published : Jul 13, 2020, 5:28 PM IST

ஒரு பக்கம் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்துவருகிறது. மறுபக்கம் சீனாவுடன் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில், அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் சார்பாக மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆய்வுப் பொருளாக 'சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்போம்' என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் நிஷா திசாய் பிஸ்வால் கூறுகையில், "இரு நாட்டு உறவின் மூலம் சிறப்பான முறையில் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் உறுதிபூண்டுள்ளோம். மக்களின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கட்டமைக்க இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. ஆனால், உலக நன்மைக்கே அவர்கள் பயன்படுவார்கள். இதனையே நாங்கள் இந்த மாநாட்டில் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

உலக விநியோக சங்கிலி மற்றும் கரோனாவை எதிர்த்து போராடுவது என்ற தலைப்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அமி பேரா, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேசுவுள்ளனர். கரோனாவுக்குப் பிறகான காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி, என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசவுள்ளார்.

ஜூலை 22ஆம் தேதி, கரோனாவுக்குப் பிறகான காலத்தில் இந்திய-அமெரிக்க நாடுகள் ஒன்றுசேர்ந்து உலகை எப்படி வழிநடத்துவது, என்ற தலைப்பில் அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் தலைமைச் செயல் அலுவலர் தாமஸ் ஜே. டோனோஹூ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வார்னர் ஆகியோர் கலந்துரையாடவுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவுடனான வர்த்தகம் - அமெரிக்கா முதல் இடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.