ETV Bharat / bharat

சீன நிறுவனங்களை இனி எந்த திட்டங்களிலும் அனுமதிக்கமாட்டோம் - நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை

டெல்லி : இந்திய நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட எந்த திட்டங்களிலும் இனி சீன நிறுவனங்களை இந்திய அரசு அனுமதிக்காது என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இனி சீன நிறுவனங்களை எந்த திட்டங்களிலும் அனுமதிக்கமாட்டோம் - நிதின் கட்காரி

author img

By

Published : Jul 1, 2020, 9:25 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள் இனி பங்களிப்பு செலுத்துவதையும், பங்கேற்பதையும் மத்திய அரசு தடை செய்யும். தேசிய அளவிலான சாலைகள் கட்டுமானத்தில் சீன பங்காளர்களைக் கொண்ட கூட்டு நிறுவனங்களுக்கு இனி அனுமதி வழங்க மாட்டோம். கூட்டுத் தொழில் வழியாக வந்தால் சீன நிறுவனங்கள் மறைமுகமாக நமது நாட்டிற்குள் நுழைவதையும் தடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

நெடுஞ்சாலைத் திட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய அதற்கான தகுதி அளவுகோல்களை தளர்த்தவும் அரசு முடிவெடுத்துள்ளது. விரிவுபடுத்துவதற்காக சீன நிறுவனங்களைத் தடைசெய்வதும், இந்திய நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதும் ஒரு கொள்கை விரைவில் வெளிவரும். தற்போது சில சீன பங்காளர்களை உள்ளடக்கிய ஒரு சில திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ள இசைவு அளிக்கப்பட்டுள்ளன.

எதிர்கால டெண்டர்களில் புதிய முடிவு செயல்படுத்தப்படும். எதிர்கால ஏலங்களைப் பொறுத்தவரை, சீன கூட்டு முயற்சிகள் ஏதேனும் இருந்தால் முற்றிலுமாக மறுதலிப்பு செய்யப்படும். தொழில்நுட்ப மற்றும் நிதி விதிமுறைகளை தளர்த்துவதற்கான கூட்டத்தை நடத்த நெடுஞ்சாலை செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர் எஸ்.எஸ்.சந்து ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அதை மாற்ற உள்ளோம். தொழில் திட்டங்களில் பங்கேற்க இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த திட்டங்களுக்கான தகுதி விதிமுறைகள் ஏற்படுத்தப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை அல்லது வடிவமைப்பு போன்ற துறைகளில் வெளிநாட்டு கூட்டு முயற்சிகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியிருந்தாலும், நாங்கள் சீனர்களை அனுமதிக்க மாட்டோம்.

உள்ளூர் உற்பத்தியின் திறனை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். என்றாலும், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் முடிவில் அரசு இருந்தாலும், சீன முதலீட்டாளர்கள் மட்டும் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்திய துறைமுகங்களில் சீனாவின் சரக்குகளை நிறுத்துவது, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது போன்றவற்றை அரசு கட்டுப்படுத்தும், தடை செய்யும். ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் இந்த புதிய வரைமுறைகளினால் நாடு தன்னிறைவடையும், பெரும் முன்னேற்றம் காணும்" என கூறினார்.

முன்னதாக, நேற்று முன்தினம் (ஜூன் 29) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.