ETV Bharat / bharat

'இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது'- துருக்கியை கண்டித்த இந்தியா - ஜம்மு காஷ்மீர், எர்டோகன், இந்தியா, ரவீஷ் குமார்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த துருக்கி அதிபர் எர்டோகனின் கருத்துகளை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.

துருக்கியை கண்டித்த இந்தியா
துருக்கியை கண்டித்த இந்தியா
author img

By

Published : Feb 18, 2020, 10:54 AM IST

Updated : Feb 18, 2020, 2:12 PM IST

முதல் உலகப் போரில் துருக்கி மக்கள் பட்ட துன்பத்துடன், ஜம்மு காஷ்மீரை தொடர்புபடுத்தி துருக்கி அதிபர் எர்டோகன், பாகிஸ்தானில் பேசியிருந்தார். அதாவது, “முதல் உலகப் போரில் துருக்கி மக்கள் வெளிநாட்டுக்கு எதிராக போரிட்டனர். அதேபோல் ஜம்மு காஷ்மீர் மக்கள் போரிடுகின்றனர்” என பேசினார்.

எர்டோகனின் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எர்டோகனின் கருத்துகள் பண்டைக்கால வரலாற்றையோ, மக்களின் மனதையோ பிரதிபலிக்கவில்லை.

மாறாக, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதுபோல் உள்ளது. அவர் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா நிராகரித்துவிட்டது. மேலும் அவரின் பேச்சுகள் கடந்த கால நிகழ்வுகளை சிதைத்து, நிகழ்காலத்தை பற்றிய குறுகிய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் துருக்கி தலையிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காஷ்மீர் எங்களுக்கும் முக்கியம்தான்' - பகீர் கிளப்பிய துருக்கி அதிபர்

Last Updated : Feb 18, 2020, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.