ETV Bharat / bharat

கல்வான் பள்ளதாக்கு: உரிமை கோரும் சீனா, நிராகரித்த இந்தியா

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தை வரலாற்று ரீதியில் பார்க்க வேண்டும். அதனை சீனா உரிமை கோருவதை எவ்விதத்திலும் அனுமதிக்கமாட்டோம் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்டவா

author img

By

Published : Jun 21, 2020, 9:42 AM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளாத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

இதனையடுத்து, இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் புதிய அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டது.

அதில், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி. அந்தப் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது. அதனால் ஏற்பட்ட மோதலில்தான் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியைச் சீனா உரிமை கோருவதை இந்தியா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ”கல்வான் பள்ளத்தாக்கு பகுதி குறித்த நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக உள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு(Line of Actual Control) விவகாரத்தில் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட, ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை சீனா முன்வைக்கிறது. முந்தைய காலத்தில் சீனா ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டில் கூட இந்த வாதம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.