ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரிப்பு!

டெல்லி: அசாம்,கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jul 6, 2020, 8:34 PM IST

corona
corona

நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதுவரை எடுக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனைகள் ஒரு கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், " அசாம், கர்நாடகா, புதுச்சேரி, சண்டிகர், திரிபுரா, கர்நாடகா, ராஜஸ்தான், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் தேசியளவில் கரோனா பாதிப்பு சராசரியான 6.73 விழுக்காடைவிட குறைந்து காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் அதிகரிக்கும் கரோனா சோதனையும், தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக கண்டறிதலும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்ததின் பலனாக குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் 5.55 விழுக்காடிற்கும் குறைவான கரோனா பாதிப்புகளே பதிவாகியுள்ளது.

கரோனா மீட்பு வீதமும் 60.86 விழுக்காடை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1, 105 COVID-19 சோதனை ஆய்வகங்கள் மூலம் 1,80,596 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.