இந்தியா-கத்தார் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமிமம் பின் ஹமாத் அல் தானி இருவரும் கடந்த 8ஆம் தேதி தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
குறிப்பாக, இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இருவரும் முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அப்போது, கத்தார் நாட்டின் முதலீடுகளை அதிகரிக்க சிறப்பு செயற்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவல் ஓய்ந்தவுடன் இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, எரிசக்தித் துறையில் முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும் சிறப்பு குழு ஒன்றை தற்போது அமைத்துள்ளன. இதை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் இந்தியா சார்பில் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலரும், கத்தார் சார்பில் கத்தார் பெட்ரோலியத்தின் துணைத் தலைவரும் முக்கிய பிரதிநிதிகளாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நான் குடியரசு தலைவரான போதே, காங்., தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டது' - பிரணாப் முகர்ஜி